Krishnagiri: பதற வைக்கும் பட்டாசு குடோன் வெடி விபத்து - 5 பேர் பலி
ஆலையில் பணியில் இருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயம் அடைந்த 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை அருகே இன்று காலை பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்த பட்டாசு குடோனில் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வெடிவிபத்தால் அப்பகுதியில் கரும்புகை பரவி உள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆலையில் பணியில் இருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயம் அடைந்த 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெடி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை அனுமதி பெற்று நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்