School Holiday: வெள்ள பாதிப்பு எதிரொலி.. இந்த 2 மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு!
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் கடந்த 18, 19ம் தேதிகளில் அதி கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் (டிச.21) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரலாறு காணாத பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா். நிவாரண முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும். வரும் வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை (டிச. 21) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்