Crime : புதுக்கோட்டையில் சோகம்.. பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி!
புதுக்கோட்டையில் மாணவி சந்தியா பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா. இவர் அங்கு உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி சந்தியா பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகள் சந்தியா மீனம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு மாணவி சந்தியா தனது பெற்றோருடன் அவர்களது குடிசை வீட்டில் உறங்கும்போது பாம்பு கடித்துள்ளது. இதனை அறியாத சந்தியா வீட்டிலே இருந்த நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மருத்துவர்கள் சந்தியாவை பரிசோதனை செய்து பின்னர் பாம்பு கடித்துள்ளது என்பதை உறுதி செய்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 9 தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தியா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு கடித்து மாணவி சந்தியா உயிரிழந்தது அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவி சந்தியாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போதிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதேபோல இரு தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலம், முஜாபர்பூரை சேர்ந்தவர் ரினா தேவி (39). இவர் சென்னிமலை அருகே ஈங்கூர் குட்டப்பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகள் ராதிகா குமாரி (10). சம்பவத்தன்று சிறுமி ராதிகா குமாரி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது காலில் பாம்பு கடித்து பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிறுமி ராதிகா குமாரி பரிதாபமாக இறந்து போனார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்