Rowdy Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருப்பம்..முக்கிய புள்ளி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை - பரபரப்பு சம்பவம்!
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(1 / 6)
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்பவர் சென்னை மாதவரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(2 / 6)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை இன்று காலை 5:30 மணியளவில் விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.
(3 / 6)
ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
(4 / 6)
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
(5 / 6)
2014-ல் குன்றத்தூரில் நடந்த கொலை வழக்கு, திருவள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் தென்னரசு கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற கேலரிக்கள்