Rowdy Baby Surya : ஆபாச புகைப்படம் வெளியிடுவேன்.. மிரட்டல் விடுத்த ரவுடி பேபி சூர்யா.. சிக்காவோடு அதிரடி கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rowdy Baby Surya : ஆபாச புகைப்படம் வெளியிடுவேன்.. மிரட்டல் விடுத்த ரவுடி பேபி சூர்யா.. சிக்காவோடு அதிரடி கைது!

Rowdy Baby Surya : ஆபாச புகைப்படம் வெளியிடுவேன்.. மிரட்டல் விடுத்த ரவுடி பேபி சூர்யா.. சிக்காவோடு அதிரடி கைது!

Divya Sekar HT Tamil Published Oct 13, 2023 08:50 AM IST
Divya Sekar HT Tamil
Published Oct 13, 2023 08:50 AM IST

ஆபாச புகைப்படம் வெளியிடுவேன் என கூறி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவுடி பேபி சூர்யா கைது
ரவுடி பேபி சூர்யா கைது

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர்.

பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து 1 ஆண்டு சிறையிலிருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்தார். இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்து அவர் கடந்த காலங்களில் தான் சந்தித்து வந்த பிரச்னைகளை பற்றிப் பேசி வந்தார்.

அதில்,”பிள்ளைகளின் பசியை போக்க நான் பாலியல் தொழிலுக்குள் சென்றேன். அவர்களுக்கு என் பசி, வறுமை தெரியாது. விலங்கை நடத்துவது போல் என்னை நடத்தினார்கள். ஒருவர் என சொல்லிவிட்டு அங்கு 10 பேர் இருப்பார்கள். இதனால் தான் நான் ஆண் சமூகத்தை வசைப்பாட ஆரம்பித்தேன். 

5 நிமிட சுகத்திற்காக டார்ச்சர் செய்வார்கள். மது போதையில் பாட்டிலை எடுத்து எனது பெண்ணுறுப்பில் நுழைத்தார்கள். நிறைய சித்திரவாதை செய்து இருக்கிறார்கள். டிக் டாக்கில் அரைகுறை ஆடைகளை அணிந்து டான்ஸ் ஆடியது பப்ளிசிட்டிக்காக. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். பெரும்பாலான வீடியோக்களை போதையில் எடுத்தது. பிறகு பாலியல் தொழிலுக்காகச் சிங்கப்பூர் வரைக்கும் சென்றேன்.” என இவர் அளித்த பேட்டி வைரல் ஆனது.

இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த ரவுடி பேபி சூர்யா, உனது ஆபாச படத்தை வெளியிடப்போவதாக கூறி சித்ரா என்பவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரவுடி பேபி சூர்யா மீது மதுரை காவல் ஆணையரிடம் ஆக.22ஆம் தேதி புகார் அளித்தார். அந்தப் புகாரில் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் சிக்கந்தர் உள்பட 4 பேர் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஜோடியை கைது செய்தனர். இவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.