Extended Reality: ’AR, VR தெரியும் XR தெரியுமா?’ மாறும் தொழிற்கல்வி! கொட்டும் வேலை வாய்ப்புகள்!
”உற்பத்தி, மருத்துவம், விளையாட்டு, ட்ரோன் இயக்குதல் உள்ளிட்ட துறைகளில் XR தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது”
தொழில் நுட்ப உலகில் AI என்ற வார்த்தையின் புழக்கம் நாளுக்குநாள் எவ்வளவு அதிகமாகி வருகிறதோ அதே அளவுக்கு AR (Augmented Reality), VR (Virtual Reality), XR (Extended Reality) ஆகிய வார்த்தைகளின் புழக்கமும் அதிகரித்து வருகிறது.
ஆக்மென்ட் ரியாலிட்டி (AR)
ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) என்பது படங்கள், ஒலிகள், உரை உள்ளிட்டவற்றை கணினி மூலம் உள்ளடக்கி நிஜத்தில் இருப்பது போல் காட்சிப்படுத்தும் தொழில் நுட்பமாகி உள்ளது. AR அனுபவங்களை 2டி வடிவில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், AR கண்ணாடிகள் அல்லது ஹெட்அப் டிஸ்ப்ளேக்கள் போன்ற சாதனங்கள் நம்மால் பெற முடியும்.
விர்ச்சுவல் ரியாலிட்டி (VR)
விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) முற்றிலும் அதிவேகமான, கணினியால் உருவாக்கப்பட்ட சூழலை உருவாக்குகிறது, இது பயனர்களை நிஜ உலகில் இருந்து தனிமைப்படுத்துகிறது. VR ஹெட்செட்கள் அல்லது பிற பிரத்யேக வன்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் மெய்நிகர் சூழலுடன் தொடர்பு கொள்ளக்கூடிய டிஜிட்டல் இடத்தில் முழுமையாக மூழ்கிவிடுவார்கள். விஆர் பொதுவாக கேமிங், சிமுலேஷன் பயிற்சி, மெய்நிகர் சுற்றுப்பயணங்கள் ஆகிய செயல்பாடுகளின் போது ஊடாடும் அனுபவத்தை இந்த தொழில் நுட்பம் தருகிறது.
எக்ஸ்டண்டட் ரியாலிட்டி (XR)
எக்ஸ்டண்டட் ரியாலிட்டி (எக்ஸ்ஆர்) என்பது ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) இரண்டையும் உள்ளடக்கிய தொழில்நுட்பம் ஆகும். முழு மெய்நிகர் அனுபவங்கள் (VR) மற்றும் டிஜிட்டல் கூறுகளை நிஜ உலகத்துடன் (AR) கலந்து யதார்த்த செயல்பாடுகளின் அருகில் இது கொண்டு செல்கிறது.
இத்தகைய தொழில்நுட்பங்கள் தொழிற்கல்வி பயிற்சியில் மிகப்பெரிய மாற்றத்தையும், அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக கூறுகிறார் தொழில்நுட்ப நிபுணரும், ஸ்கில்வெரி நிறுவனருமான சபரிநாத் சி நாயர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய அவர், 3டி படத்தை அனைவரும் பார்க்கும் போது அதில் உள்ள கதாப்பாத்திரங்கள் நமக்கு அருகில் உள்ளது போல் தெரியும். XR தொழில்நுட்பத்தில் AR (Augmented Reality), VR (Virtual Reality) தொழில்நுட்பகங்கள் இணைந்து செயல்படுகிறது.
இதன் மூலம் தொழிற்கல்வியை எளிமையாக கற்றுக் கொண்டுக்க முடியும். பொறியியல் சார்ந்த வேலைகளான வெல்டிங் உள்ளிட்ட பயிற்சிகளை எந்த வித ஆபத்துகளும் இல்லாமல், மெட்டீரில் வேஸ்டேஜ் குறித்து கவலைப்படாமலும் மிக எளிமையாக XR தொழில்நுட்பம் மூலம் கற்றுக் கொள்ள முடியும். XR தொழில்நுட்பம் மூலம் இது போன்ற பயிற்சியை செய்வதால் வழக்கமாக செய்யும் பயிற்சிக்கு ஆகும் செலவைவிட குறைவாக ஆகும். XR தொழில்நுட்பம் மூலம் வெல்டிங், பெயிண்டிங், ஏசி பழுது பார்த்தல், சோலார் பேனல் அமைத்தல் போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
உற்பத்தி துறையில் திறன்களை எளிதில் வளர்த்துக் கொள்ள XR தொழில்நுட்பம் பெரிய அளவில் எதிர்காலத்தில் பயன்படும். கையின் அசைவுகளை அதிகமாக கொண்டுள்ள தொழில்களை எளிய பயிற்சியின் மூலம் XR தொழில்நுட்பம் முலம் அடைய முடியும்.
மருத்துவம், விளையாட்டு, ட்ரோன் இயக்குதல் உள்ளிட்ட துறைகளில் XR தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கூறினார்.
டாபிக்ஸ்