தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  New Rules: 'இனி தப்பிக்க முடியாது ராஜா'..வாகனம் ஓட்டும் சிறுவர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை - எப்போது அமல்?

New Rules: 'இனி தப்பிக்க முடியாது ராஜா'..வாகனம் ஓட்டும் சிறுவர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை - எப்போது அமல்?

Karthikeyan S HT Tamil
May 30, 2024 09:15 AM IST

New Rules: வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

New Rules: 'இனி தப்பிக்க முடியாது ராஜா'..வாகனம் ஓட்டும் சிறுவர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை - எப்போது அமல்?
New Rules: 'இனி தப்பிக்க முடியாது ராஜா'..வாகனம் ஓட்டும் சிறுவர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை - எப்போது அமல்?

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்ற மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

RC ரத்து

இந்தநிலையில் தான் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும். வாகனத்தின் RC-யை ரத்து செய்யும் இந்த விதிமுறை ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அபராதம் எவ்வளவு?

மேலும் வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு

முன்னதாக, போக்குவரத்து போலீசார் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 3-ன் படி உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொதுஇடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது. பிரிவு 4-ன் படி 18 வயதுக்குக் குறைவான எந்த ஒரு நபரும் பொதுஇடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 180-ன் படி மேற்கண்ட சட்டப்பிரிவுகளுக்கு முரணாக உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத நபரை அல்லது 18 வயதுக்குக் குறைவான நபரை வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும். இக்குற்றத்திற்கு ரூ.1000 அபராதமாகவும் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கலாம்.

உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்குக் குறைவான சிறார்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக் கூடாதென எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள்/ வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்