Thoothukudi firing: ரஜினி தனது தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thoothukudi Firing: ரஜினி தனது தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்

Thoothukudi firing: ரஜினி தனது தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்

Karthikeyan S HT Tamil
Oct 18, 2022 09:39 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நடிகர் ரஜினி தனது தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

<p>ரஜினி</p>
<p>ரஜினி</p>

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி சென்றார். ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்' என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தக் கருத்து குறித்து நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த ரஜினிகாந்த், "ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது" என்று தெரிவித்தார்.

<p>ரஜினியின் கருத்து பற்றி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
ரஜினியின் கருத்து பற்றி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கையில்,"சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.