Aishwarya Rajinikanth: ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் வைரம் கொள்ளை!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தற்போது லால் சலாம் திரைப்ப பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். நடிகர் விஷால் நடித்து வரும் இந்த படத்தில் அவரது தந்தை ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கணவர் தனுஷ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டார். இதனால் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் தனியாக தன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் வைர செட்கள், கோயில் நகைகளில் உள்ள வெட்டப்படாத வைரங்கள், பழங்கால தங்கத் துண்டுகள், நவரத்தினம் செட்கள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வெட்டப்படாத வைரம்- இரண்டு கழுத்து துண்டுகள் பொருந்திய காதணிகள், ஆரம் நெக்லஸ் மற்றும் சுமார் 60 சவரன் வளையல்கள் காணாமல் போனதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. “லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள எனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. ஐஸ்வர்யா தனது புகாரில், 2019 ஆம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு நகைகளை பயன்படுத்திய பின்னர் தனது லாக்கரில் வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
லாக்கர் ஐஸ்வர்யா வசம் இருந்தபோதிலும், அது முதல் மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2021 வரை, அது செயின்ட் மேரி சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்தது, பின்னர் அது சிஐடி காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது, மீண்டும் செப்டம்பர் 2021 இல் செயின்ட் மேரி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது.
ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. “லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள எனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. இது எனது ஊழியர்களுக்கும் தெரியும். அவர்களும் அடிக்கடி அப்பார்ட் மெண்டுக்கு செல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 10 ம் தேதியன்று சரிபார்த்த போது திருமணமான 18 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டிருந்த நகைகளில் மேற்கூறிய நகைகள் இல்லை என்பது தெரிய வந்தது என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டில் பணியாற்றுபவர்கள் நகைகளை கொள்ளையடித்திருக்கிறார்களா அல்லது வேறு யாரேனும் கொள்ளையடித்துள்ளனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்