Raja Raja Cholan:ராஜராஜசோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Raja Raja Cholan:ராஜராஜசோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர்

Raja Raja Cholan:ராஜராஜசோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர்

Karthikeyan S HT Tamil
Nov 02, 2022 04:09 PM IST

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,037 ஆவது சதய விழா மங்கல இசையுடன் தஞ்சாவூரில் தொடங்கியது. சதய விழா இன்றும், நாளையும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜசோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.