Rain Alert: ’மக்களே உஷார்’ 22 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: ’மக்களே உஷார்’ 22 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ இதோ முழு விவரம்!

Rain Alert: ’மக்களே உஷார்’ 22 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Jan 09, 2024 11:23 AM IST

”Rain Alert: வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேலும் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது”

22 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
22 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேலும் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக நேற்று முதல் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் 5 இடங்களில் அதிகனமழை, 17 இடங்களில் மிக கனமழை, 55 இடங்களில் கனமழையும் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம்  திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.