தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Rain Alert: Rain Will Continue Till 1 Pm In 17 Districts Including Chennai - Met Office

Rain Alert:‘17 மாவட்டங்களுக்கு மேகம் போட்ட ஸ்கெட்ச்!’ ஒரு மணி வரை வெளுக்க போகும் மழை!

Kathiravan V HT Tamil
Nov 30, 2023 10:33 AM IST

”Rain Alert:அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது”

மழை எச்சரிக்கை
மழை எச்சரிக்கை

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் மாதம் 2ஆம் தேதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும் என்ற எச்சரிக்கை இன்று காலை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு சில இடங்களில் மிக கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

ஏற்கெனவே நேற்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆவடியில் 19 செ.மீ, கொளத்தூரில் 15 செ.மீ, திருவிக நகரில் 15.4 செ.மீ., அம்பத்தூரில் 14 செ.மீ., மலர் காலனியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், பிற்பகல் ஒரு மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WhatsApp channel