Sekar Babu: இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்; ஆனால் சனாதனத்தை ஏற்கமுடியாது - அமைச்சர் சேகர் பாபு தரப்பு வாதம்
அமைச்சர் சேகர் பாபு இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும், ஆனால் சனாதனத்தை ஏற்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
சனாதனத்தை ஒழிப்பதாகக் கூறி பேசிய அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் உதயநிதி எந்த தகுதியில் அடிப்படையில் பதவியில் இருக்கிறார்கள் என விளக்கம் அளிக்கக்கோரி, இந்து முன்னணி அமைப்பினர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தன.
முதலில் அமைச்சர் உதயநிதியின் தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதத்தை முன்வைத்தபின், அமைச்சர் சேகர் பாபுவின் தரப்பு வழக்கறிஞர் ஜோதி வாதத்தை முன்வைத்தார்.
அதில், 'இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதால் உள்நோக்கத்துடன் எமது கட்சிக்காரர் சேகர் பாபுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டதாக இந்த வழக்கு பதிவாகியிருக்கிறது. சனாதனம் வேறு, இந்து மதம் என்பது வேறு. இந்து மதம் பழமையான மதம். தஞ்சை பெரியகோயில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய, ராஜராஜசோழன் சனாதனத்தை ஏற்கவில்லை. இந்து மதத்தை சனாதனம் என்ற சிறுவட்டத்துக்குள் சுருக்கக் கூடாது. எமது கட்சிக்காரர் சேகர் பாபு தீவிர இந்து பக்தர்.
இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர். ஆனால், ஒருபோதும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்காதவர்.
மனு ஸ்ருதிமியை அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதில் எந்த தவறும் இல்லை. இந்து ஒருவர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதில் கூட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. அதை ஒழிக்கவே எமதுகட்சிக்காரர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார்.
மனு ஸ்ருதிமிக்கு எதிராக பேசியது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்? நிர்வாகம் மதச்சார்பற்றது. நிர்வாகமும் மதமும் வெவ்வேறு வடிவம் கொண்டவை’ என வாதத்தை முன்வைத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்