Kamba Ramayanam: உருகி உருகி கம்ப ராமாயணத்தைக் கேட்ட பிரதமர் மோடி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kamba Ramayanam: உருகி உருகி கம்ப ராமாயணத்தைக் கேட்ட பிரதமர் மோடி

Kamba Ramayanam: உருகி உருகி கம்ப ராமாயணத்தைக் கேட்ட பிரதமர் மோடி

Marimuthu M HT Tamil
Jan 20, 2024 02:27 PM IST

ஸ்ரீரங்கத்தில் கம்ப ராமாயணத்தை பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.

ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணத்தைக் கண்மூடி கேட்ட பிரதமர் மோடி
ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணத்தைக் கண்மூடி கேட்ட பிரதமர் மோடி

திருச்சிக்கு வருகை தந்த பிரதமர், பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்கு, ​​வேஷ்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து சென்று, அங்கு பிரார்த்தனை செய்தார். பின், கோயில் வளாகத்தில் உள்ள 'ஆண்டாள்' என்ற யானைக்கு உணவு அளித்து ஆசிபெற்றார்.

அப்போது, ​​'கம்பராமாயணத்தில்' இருந்து பண்டிதர் ஒருவர் பாடுவதை பிரதமர் மோடி கேட்டார்.

'கம்பராமாயணம்' என்பது ராமாயணத்தின் மிகவும் பழமையான பதிப்புகளில் ஒன்றாகும். தமிழ்க் கவிஞர் கம்பர்,  12ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில், அங்கு இருக்கும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து, தனது ராமாயணத்தைப் பாடி, அரங்கேற்றி மக்களின் மனங்களை வென்றதாக கூறப்படுகிறது. இன்றும், அந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், 'கம்ப ராமாயண மண்டபம்' என்ற பெயரில், அந்த மண்டபம் அழைக்கப்படுகிறது. 

கம்பர் முதன்முதலில் தமிழ் ராமாயணத்தைப் பாடிய அந்த இடத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அப்பாடல்களைக் கேட்டு, தமிழ், தமிழ்நாடு மற்றும் ஸ்ரீராமருக்கு இடையேயான ஆழமான பந்தத்தை உலக மக்களுக்கு மறைமுகமாக தெரியப்படுத்தினார்.

ஸ்ரீரங்கத்துக்கும் ராமருக்கும் இடையே இருக்கும் தொடர்பு:

நாட்டின் மிகப் பழமையான இந்த கோயிலுக்கும் ராமருக்கும் ஆழமான தொடர்பு உள்ளது. ஸ்ரீரங்கத்தில் வணங்கப்படும் ஸ்ரீரங்கநாத சுவாமி, விஷ்ணுவின் வடிவமாகும். புராணத்தின்படி, ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சிலை முதலில் ராமர் மற்றும் அவரது முன்னோர்களால் வணங்கப்பட்டது. இது பிரம்மாவால் ராமரின் முன்னோர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது, அயோத்தியில் தங்களோடு இந்தச் சிலையை வைத்துக் கொண்டு தினசரி வழிபாடு செய்துவந்துள்ளனர்.

ஒருமுறை, விபீஷணன் அவரிடம் ஒரு விலையுயர்ந்த பரிசைக் கேட்டபோது, ​​​​ராமர் இந்த சிலையை விபீஷணனிடம் கொடுத்து வணங்கும்படி கூறியுள்ளார். விபீஷணன் இலங்கைக்கு பயணம் செய்த போது, ​​வழியில், இந்த சிலை ஸ்ரீரங்கத்தில் வைக்கவே, அங்கேயே நிலைபெற்றது.

முன்னதாக திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடியை, அவர் செல்லும் வழியில் திரண்டிருந்த ஏராளமானோர் வரவேற்றனர். பிரதமர் தனது வாகனத்தில் இருந்து அவர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே சென்றார். 

பிரதமரின் வருகை குறித்து கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் கூறுகையில், “நமது பிரதமரின் ஸ்ரீரங்கம் வருகை இந்திய பக்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் எந்தப் பிரதமரும் ஸ்ரீரங்கத்திற்கு வந்ததில்லை. ஒரு பிரதமர் இங்கு வருவது இதுவே முதல் முறை. அவருடைய வருகையால் நாங்கள் அனைவரும் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்றார்.

அதன்பின், ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்ய உள்ளார். இது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.