Anakaputhur: அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்தி வரும் போலீசார்.. நீடிக்கும் பதற்றம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anakaputhur: அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்தி வரும் போலீசார்.. நீடிக்கும் பதற்றம்!

Anakaputhur: அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்தி வரும் போலீசார்.. நீடிக்கும் பதற்றம்!

Marimuthu M HT Tamil
Nov 05, 2023 02:57 PM IST

சென்னை அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரப் பகுதி குடியிருப்புவாசிகளை பாரபட்சமின்றி போலீசார் அகற்றி வருகின்றனர்.

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்தி வரும் போலீசார்
அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்தி வரும் போலீசார்

இதற்காக அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வீட்டு வரி வசூலிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எந்தவொரு சார்பின்றி அகற்றி அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் அடிப்படையில், சென்னை நீர் நிலைகளைப் பாதுகாக்க அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புக் கட்டடங்களில் வசிக்கும் நபர்களை அப்புறப்படுத்த இரண்டு முறை வருவாய்த்துறையின் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு எடுந்ததும் அப்பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, சமரசமில்லாமல் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.