காஸ்மெட்டிக் பொருட்களாக மாறும் நெகிழி கழிவுகள்! கரியமில வாயுவிலிருந்து எரிபொருள் – அசத்தல் கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி
Cambridge Research : மேலும், விவசாயக் கழிவுகள் வழக்கமாக எரிக்கப்படுவதால் எற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்தும் நாட்டை காக்க முடியும். (தலைநகர் டெல்லியிலேயே வேளாண் கழிவுகளை அருகிலுள்ள மாநிலங்கள் எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைந்தும், சுகாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கிறது)

உலகம், இந்தியா, தமிழகத்தில் புவிவெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதை குறைக்க உரிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். மேலும் ஒவ்வொரு நாடும் பெரிய சவாலான ஒன்றாக இந்த பருவநிலை மாற்றத்தை பார்த்து வருவதுடன் சுற்றுச்சூழலை காப்பதை தங்களின் தலையாய கடமையாக எண்ணி செயல்படுகின்றன.
இந்நிலையில் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளும் வெளியாகி அதிர்ச்சி தகவல்களை நமக்கு அளிக்கின்றன. ஐரோப்பாவில் புவிவெப்பமடைதல் காரணமாக கொசுக்களால் ஏற்படும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் அதிகமாகும் என ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் இந்த மாதத்தில் வரலாறு காணாத வெப்பம் (41°C) பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு எல் நினோ காரணமாக வெப்பம் அதிகரிக்கும் என்பதால், கோதுமை விளைச்சல் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. தமாழகத்தில், இந்த மாதத்தில் மழையளவு வழக்கத்திற்கு மாறாக அதிகம் பதிவாகி வேளாண்மையில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.