Petrol bomb attack: கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் பாஜக கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவர் வீசி எறிந்த பெட்ரோல் குண்டு வெடிக்காத காரணத்தால் அங்கு நடக்கவிருந்த சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல்துறையினர் அந்தப் பெட்ரோல் குண்டு கைப்பற்றினர்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குண்டு வீசி அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை அறிந்த பாஜகவினர் அந்த அலுவலகம் முன் குண்டு வீழ்ச்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மேலும் பரபரப்பாக இருந்தது.
டாபிக்ஸ்