Palani Temple: பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Temple: பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் என்ன?

Palani Temple: பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் என்ன?

Aarthi V HT Tamil
Feb 23, 2023 11:45 AM IST

பழனி மலைக்கோயிலின் உண்டியல் காணிக்கை வருவாய் 7 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.

பழனி முருகன் கோயில்
பழனி முருகன் கோயில்

அதிலும் குறிப்பாக 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். 48 நாட்களுக்குள் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் நன்மை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது காணிக்கை செலுத்துவதற்க்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோயில் முதல் மலைகோயில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில் பக்தர்களால் செலுத்திய காணிக்கைகளால் நிறையும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. 

மூன்று நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கமாக 7 கோடியே 17 லட்சத்து 42ஆயிரத்து 126 ரூபாய் வருவாயாக கிடைத்து உள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 248 கிராமும், வெள்ளி 48 கிலோ ஆயிரத்து 277 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2529 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. 

உண்டியல் எண்ணும் பணி நிறைவுபெற்றதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.