Palani Panjamirtham:பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Panjamirtham:பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி!

Palani Panjamirtham:பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி!

Karthikeyan S HT Tamil
Sep 18, 2023 08:51 AM IST

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னெறிவிப்பின்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னெறிவிப்பின்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னெறிவிப்பின்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பிரசாத விற்பனைக்காக கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவீதி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

455 கிராம் நிகர எடை கொண்ட பஞ்சாமிர்தம் பிளாஸ்டிக் டப்பா ரூ. 35க்கும், பஞ்சாமிர்தம் டின் ரூ. 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பஞ்சாமிர்த டப்பா மற்றும் டின் வகைகளுக்கு தலா 5 ரூபாய் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 500 கிராம் பஞ்சாமிர்தம் டப்பா ரூ.35-ல் இருந்து ரூ.40-க்கும், ரூ.40 டின் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உயர்த்தப்பட்ட விலையை டப்பாவில் அச்சிடாமல் , பேனாவால் எழுதி விற்பனை செய்கின்றனர்.

மாதம் பலகோடி ரூபாய் வருமானம் தரும் பழனி கோயில் பிரசாதத்தின் விலையை உயர்த்தியது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பழனி முருகனின் அருட் பிரசாதமான பஞ்சாமிர்த விற்பனையை திருக்கோயில் நிர்வாகம் சேவையாக பார்க்காமல் லாபநோக்கத்தில் விற்பனை செய்வதாகவும் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பழனியில் சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். திருவிழாக் காலங்களில் தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் டப்பாக்கள் வரை விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.