Bhavani Dam: பவானி அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு
பவானிசாகர் அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பவானி அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு வரும் 3ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு 7776.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டாம்போக பாசனத்துக்கு நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என நீர் வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: