தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ma Subramanian: தமிழ்நாட்டில் புதிய வைரஸ் பாதிப்பு இல்லை! வாரந்தோறும் மருத்துவ முகாம் - அமைச்சர் தகவல்

Ma Subramanian: தமிழ்நாட்டில் புதிய வைரஸ் பாதிப்பு இல்லை! வாரந்தோறும் மருத்துவ முகாம் - அமைச்சர் தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2023 03:56 PM IST

தமிழ்நாட்டில் புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும், வரும் டிசம்பர் மாதம் முழுவதும் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே அண்டை நாடான சீனாவில் அதிகரித்து வரும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு காரணமாக, மத்திய அரசு சார்பில் மாநில அரசுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசாங்கத்திடம் மருத்துவ தயார்நிலையை உடனடியாக மதிப்பாய்வு செய்ய கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளிடையே அதிகமாக இருந்து வருகிறது. பெய்ஜிங் நகரில் அமைந்திருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் சுமார் 7 ஆயிரம் குழந்தைகள் வரை காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை இருந்து வருகிறது. 

சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன. இதனால் இந்த நோய் பாதிப்பு குறித்த தரவுகளை சேகரித்து சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதிய வைரஸ் தெற்று பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

"சீனிவில் புதிய வைரஸ் பாதிப்பு இருந்து வருவதாகவும், அந்த வைரலாஸ் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார மையம் பல அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இந்த காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறையினர் கூர்மையாக ஆராய்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை.

மழை கால நோய்களாக இன்ப்ளுயென்சா, மலேரியா, டெங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்கு வாரந்தோறும் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும் விதமாக தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 25 வரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 10, 576 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 5,21, 853 பயனடைந்துள்ளனர். இதில் 1791 காய்ச்சல் பாதிப்பிலும், 917 பேர் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர்.

வரும் டிசம்பர் மாதமும் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன."

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்