JACTO GEO Strike: ’பணிக்கு வராவிட்டால் சம்பளம் கட்!’ ஜாக்டோ ஜியோவுக்கு அரசு எச்சரிக்கை!
”JACTO GEO Strike: திட்டமிட்டப்படி நாளை ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிப்பு”

ஜாக்டோ-ஜியோ போராட்டம்
பணிக்கு வராவிட்டால் ஊதியம் தர கிடையாது என வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலளாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். மேலும் நாளை (பிப்ரவரி 15) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நிதி மறூம் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2½ ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக;