Dr. MGR University : டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்க்ழகத்துக்கு புதிய துணைவேந்தர் – ஆளுநர் உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dr. Mgr University : டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்க்ழகத்துக்கு புதிய துணைவேந்தர் – ஆளுநர் உத்தரவு

Dr. MGR University : டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்க்ழகத்துக்கு புதிய துணைவேந்தர் – ஆளுநர் உத்தரவு

Priyadarshini R HT Tamil
May 29, 2023 10:53 PM IST

Dr.MGR University : டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர். கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர். கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர். கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக 3 பேர் பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பான பட்டியல் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் கே. நாராயணசாமி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான பணி ஆணையை ஆளுநர் ஆர்.ரன்.ரவி, கே.நாராயணசாமிக்கு இன்று நேரில் வழங்கினார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணசாமி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

இந்த நிகழ்வின்போது, ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மருத்துவ துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவமும், 13 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் கொண்டவரான கே.நாராயணசாமி சென்னை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். 2018 முதல் 2022 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் துறை இயக்குநராகவும் இருந்துள்ளார்.

கல்லூரி காலத்திலே கல்லீரல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். அதுவே பிற்காலத்தில் அத்துறையில் அவர் சிறந்து விளங்குவதற்கு உதவியது. அரசு மருத்துவமனைகளிலே அவரது துறையை சுத்தமாக வைத்திருப்பார். இது தமிழக அரசு மருத்துவமனைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்தது என்று குறிப்பிடத்தக்கது. நோயாளிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். தனது முழு வாழ்வையும் அரசு மருத்துவமனை பணிக்காகவே அர்ப்பணித்தவர். 

மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிறப்பான சேவை செய்து, தனது பங்களிப்பை வழங்கியதற்காக தமிழக அரசிடம் இருந்து விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். தனது நேர்மையாலும், திறமையாலும் இந்த இடத்தை பெற்றுள்ளார். தன் உழைப்பால் உயர்ந்தவர், கல்வியில் கொண்ட ஆர்வத்தால் இந்த இடத்தை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.