Vandalur Zoo : வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய ஆண் சிங்கம் வருகை!-new male lion arrival at vandalur zoo - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vandalur Zoo : வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய ஆண் சிங்கம் வருகை!

Vandalur Zoo : வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய ஆண் சிங்கம் வருகை!

Divya Sekar HT Tamil
Apr 22, 2023 11:58 AM IST

கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரபட்டது.

புதிய ஆண் சிங்கம்
புதிய ஆண் சிங்கம்

 பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது என்பதுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பூங்கா 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் 471 பாலூட்டிகள், 1,820 பறவைகள், 413 ஊர்வனைகள் என 2,704 விலங்குகள், பறவைகள் பராமரித்து வளர்க்கப்படுகின்றன. உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீலா, பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

இதைத் தொடர்ந்து உடல்நல குறைவு காரணமாகவும்,வயது மூப்பு காரணமாவும் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தன. இதனால் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 

இதனால் பூங்கா நிர்வாகம், பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்தது.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் இருந்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு புதிதாக சிங்கம் கொண்டுவரப்பட்டது.

புதிய ஆண் சிங்கம் கொண்டுவரப்பட்ட நிலையில் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது அதேபோல் இங்கிருந்த ஆண் வெள்ளைப்புலியை பெங்களூரு பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிற்கு ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.