தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Land Guideline Value: நிலம் வாங்க போறீங்களா? இத பாருங்க! நடைமுறைக்கு வந்தது புதிய வழிகாட்டி மதிப்பு!

Land Guideline Value: நிலம் வாங்க போறீங்களா? இத பாருங்க! நடைமுறைக்கு வந்தது புதிய வழிகாட்டி மதிப்பு!

Kathiravan V HT Tamil
Jul 01, 2024 04:40 PM IST

Land Guideline Value: புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியினை 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்படி புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியானது 01.07.2024 முதல் (விழுப்புரம் வருவாய் மாவட்டம் நீங்கலாக) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

Land Guideline Value: நிலம் வாங்க போறீங்களா? இத பாருங்க! நடைமுறைக்கு வந்தது புதிய வழிகாட்டி மதிப்பு!
Land Guideline Value: நிலம் வாங்க போறீங்களா? இத பாருங்க! நடைமுறைக்கு வந்தது புதிய வழிகாட்டி மதிப்பு!

நெறிமுறைகளை பின்பற்றி திருத்தம் 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு முத்திரை (மதிப்பீடு, வெளியீடு மற்றும் திருத்தம் செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு அமைத்தல்) விதிகள், 2010, விதி 4ன்படி ஒவ்வொரு வருடமும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பினை சீரமைக்கவும், வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத்தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு கடந்த 26.04.2024 அன்று கூடி வகுத்தளித்தது. இதனை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக்குழுக்களால் மதிப்பு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை துவங்கப்பட்டது.

துணைக்குழுக்களால் தொடர்ந்து சீராய்வு செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணைக்குழுக்கள் மே மாதம் முதல் வாரத்தில் கூடி மைய மதிப்பீட்டு குழுவின் அறிவுறுத்தல்களின்படி வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும், பொதுமக்களின் கருத்துக்களை கோருவதற்கான நடைமுறைகளையும் வகுத்தளித்தனர். இப்பணிகள் துணைக்குழுக்களால் தொடர்ந்து சீராய்வு செய்யப்பட்டன.

ட்ரெண்டிங் செய்திகள்

செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது

பொதுமக்களிடமிருந்து அறியப்பட்ட சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு துணைக்குழுக்களால் வரைவு வழிகாட்டிக்கு ஒப்புதல் அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடுகள் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பதிவுத்துறை இணையதளத்திலும், சார்பதிவாளர், வட்டாட்சியர் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டன. அவ்விவரம் உள்ளூர் செய்தி தாள்களில் மாவட்ட ஆட்சியர்களால் செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் பொதுமக்கள்

கருத்து கேட்பு மற்றும் ஆட்சேபணைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது

தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டன. மாவட்ட துணைக்குழு மூன்றாவது முறையாக கூடி வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபணை மற்றும் கருத்துரைகளை பரிசீலினை செய்தது. முரண்பாடுகள் உள்ள நிலையில் அதனை களைந்து புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியினை முழுமையாக அங்கீகரித்து மாவட்ட துணைக்குழுக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி மைய மதிப்பீட்டு குழுவிற்கு அனுப்பி வைத்தன.

விழுப்புரம் நீங்களாக நடைமுறைக்கு வந்தது 

பதிவுத்துறைத்தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு 29.06.2024 அன்று மாலை 4 மணியளவில் கூடி, மாவட்ட துணைக்குழுக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியினை 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்படி புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியானது 01.07.2024 முதல் (விழுப்புரம் வருவாய் மாவட்டம் நீங்கலாக) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

WhatsApp channel

டாபிக்ஸ்