Crime: 2 பிஞ்சு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை - போட்டி தேர்வுகளில் தோல்விதான் காரணமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: 2 பிஞ்சு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை - போட்டி தேர்வுகளில் தோல்விதான் காரணமா?

Crime: 2 பிஞ்சு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை - போட்டி தேர்வுகளில் தோல்விதான் காரணமா?

Karthikeyan S HT Tamil
Apr 23, 2023 07:39 AM IST

Krishnagiri Crime: கிருஷ்ணகிரி அருகே இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை - கோப்புபடம்
தற்கொலை - கோப்புபடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் ( 40). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் (4) என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் தெய்வா தனது குழந்தைகளுடன் கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே மாமனார் ஆறுமுகம் (58) அவருடைய மனைவியுடன் தனியாக வசித்து வருகின்றனர். எம்.எஸ்சி. முதுகலை கணித பட்டதாரியான தெய்வா அரசு பணிக்காக போட்டி தேர்வுகளுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்ற தெய்வா தொடர் தோல்விகளை சந்தித்ததாக தெரிகிறது.இதனிடையே மாமனார் ஆறுமுகத்திற்கும் தெய்வாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் தெய்வா மற்றும் குழந்தைகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது தெய்வா தனது அறையில் தூக்கி தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். 

பின்னர் இதுகுறித்து கல்லாவி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தெய்வாவின் தாயார் பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெய்வா குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை கொடுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரை கரைத்து கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.