Palani temple: அமைச்சர் பிடிஆர் சென்ற ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Temple: அமைச்சர் பிடிஆர் சென்ற ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு

Palani temple: அமைச்சர் பிடிஆர் சென்ற ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 18, 2022 05:30 AM IST

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்தடை காரணமாக அந்தரத்தில் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி கோயிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் பாதியில் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு
பழனி கோயிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் பாதியில் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு

அப்போது திடீரென மின்தடை ஏற்பட்ட நிலையில், மேலே சென்ற ரோப்கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

அந்த ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். சுமார் இரண்டு நிமிட காத்திருப்புக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது.

சாமி தரிசனத்துக்கு பின்னர் மீண்டும் ரோப்கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் லிப்ட் பழுதாகி பாதி வழியில் நிற்க, அதில் சிக்கிய அவர் அவசரவழி மூலம் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப்கார் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் பின்னர் மீண்டும் இயக்கப்பட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.