Mini marathon competition: மினி மாரத்தான் போட்டி; திரளானோர் பங்கேற்று ஓட்டம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mini Marathon Competition: மினி மாரத்தான் போட்டி; திரளானோர் பங்கேற்று ஓட்டம்

Mini marathon competition: மினி மாரத்தான் போட்டி; திரளானோர் பங்கேற்று ஓட்டம்

Karthikeyan S HT Tamil
Dec 04, 2022 04:43 PM IST

தூத்துக்குடி: திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

 விளாத்திகுளத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை எம்எல்ஏ ஜீ.வி.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விளாத்திகுளத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை எம்எல்ஏ ஜீ.வி.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டமானது இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில், ஆண்களுக்கு 16 கி.மீ தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். குறிப்பாக சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்று ஓடினர்.

ஆண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோஜ் குமார் முதலிடம் பெற்றார். 2ஆவது இடத்தை அதேபள்ளியைச் சேர்ந்த மாணவர் முகேஷ், 3ஆவது இடத்தை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் பெற்றனர். 

பெண்கள் பிரிவில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா முதலிடத்தையும், புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா இரண்டாம் இடத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலட்சுமி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.16,000, இரண்டாம் இடம் பெற்றோருக்கு ரூ.14,000, 3ஆவது இடம் பிடித்தோருக்கு ரூ.12,000 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 4 முதல் 10ஆவது இடம் வரை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்பட்டது.

மேலும், திருவண்ணாமலையில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில், 600 மீட்டர் ஓட்டத்தில் 5ஆம் இடம் பெற்ற விளாத்திகுளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிகிஷாவைப் பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.

மாணவி நிகிஷாவைப் பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.
மாணவி நிகிஷாவைப் பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) பால்ச்சாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.