Aavin Milk: ஆவினுக்கு பால் தர மறுத்து போராட்டம்: தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin Milk: ஆவினுக்கு பால் தர மறுத்து போராட்டம்: தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

Aavin Milk: ஆவினுக்கு பால் தர மறுத்து போராட்டம்: தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

HT Tamil Desk HT Tamil
Mar 17, 2023 08:32 AM IST

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் சாலையில் பாலை கொட்டி போராட்டம் செய்த பால் வியாபாரிகள்
ஈரோட்டில் சாலையில் பாலை கொட்டி போராட்டம் செய்த பால் வியாபாரிகள்

தமிழ்நாட்டில் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் பால் வினியோக நிறுத்த போராட்டம் துவங்கியுள்ளார்கள்.

மதுரை ஆவின் நிறுவனத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து 18,000 உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் தேனி உள்ளிட்ட இதர ஒன்றியங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பால் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ஆவினுக்கு பால் வழங்கும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி 40 ரூபாயாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் பால் நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதனால் மதுரை ஆவினுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் காலையில் வழங்கப்படும் 30,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், இன்று மாலை பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு அடுத்த நசியனூரில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் சாலை மறியல்; கறவை மாடுகளுடன் வந்து சாலையில் பாலைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.