Karaikudi Festival : வேலங்குடி ஸ்ரீ பெரியநாயகி கோயில் திருவிழாவுக்கு தடை கோரிய வழக்கு - தள்ளுபடி செய்த மதுரைக்கிளை!
காரைக்குடி அருகே உள்ள வேலங்குடி ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த திருவடியன் சேர்வை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடி ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த கோவில் 150 ஆண்டுகள் மிகவும் பழமையான ஒரு கோவில் இந்த கோவில் திருவிழா நடத்துவதற்காக 16 ஊர் கிராமம் வணங்கும் கோவில்.
இந்நிலையில் வேலங்குடி கிராமம் மக்கள் சார்பாக கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் கூடி தனி பட்ட முறையில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். இது சட்ட விரோதம் இதுகுறித்து காரைக்குடி வட்டாட்சியர் மற்றும் காரைக்குடி காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் திருவிழா தொடங்கி மூன்றாவது நாளாக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
வேலங்குடி கிராமம் கனேசன் என்பர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோவில் திருவிழா பிரச்சனை குறித்து காவல்துறை உதவி கண்காணிப்பாளர் காரைக்குடி வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டு திருவிழா 17 ஆம் தேதி தொடங்கி அமைதியான முறையில் நடை பெறுகிறது.
இந்த விழாவில் யாருக்கு முதல் மறியாதை கிடையாது. 16 கிராம மக்கள் வணங்குவதால் இந்த கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதி கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து திருவிழா தொடர்ந்து நடத்தலாம் என்றும் திருவிழாவிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்புகளை காரைக்குடி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்