இன்றுடன் டாட்டா காட்டும் தென்மேற்கு பருவமழை! 3 தினங்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை! எப்படி இருக்கும் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இன்றுடன் டாட்டா காட்டும் தென்மேற்கு பருவமழை! 3 தினங்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை! எப்படி இருக்கும் தெரியுமா?

இன்றுடன் டாட்டா காட்டும் தென்மேற்கு பருவமழை! 3 தினங்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை! எப்படி இருக்கும் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Oct 19, 2023 02:59 PM IST

”தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை பதிவான மழையின் அளவு 354 மீ.மீ, இயல்பான அளவு 328 மி.மீ. இது இயல்பைவிட 8 சதவீதம் அதிகம்”

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்

தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து தென் இந்திய பகுதிகளில் காற்று வீசும் நிலையில் அடுத்த மூன்று தினங்களில் தொடங்க கூடும். தற்போது அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதியை ஒட்டி உருவாகக்கூடும். 

இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக வடக்கிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலுகுறைந்து காணப்படும் என கூறினார்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, தெற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 23ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும், தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு 21 முதல் 23 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறிய பாலசந்திரன்,

அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை பதிவான மழையின் அளவு 354 மீ.மீ, இயல்பான அளவு 328 மி.மீ. இது இயல்பைவிட 8 சதவீதம் அதிகம் என்றும், சென்னையை பொறுத்தவரை பதிவான மழையின் அளவு 779 மி.மீ, இயல்பான அளவு 448 மி.மீ, இது இயல்பை விட 74 சதவீதம் அதிகம் என்றும் கூறினார்,

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தென்னிந்திய பகுதிகளான தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் மழை இருக்கும். தமிழக பகுதிகள் இயல்பை ஒட்டி மழை இருக்கும் என தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.