Meenakshi Ponnunga : பஞ்சாயத்தில் மீனாட்சிக்கு ஷாக் கொடுத்த நீதிமணி.. வெற்றி வைத்த ட்விஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Meenakshi Ponnunga : பஞ்சாயத்தில் மீனாட்சிக்கு ஷாக் கொடுத்த நீதிமணி.. வெற்றி வைத்த ட்விஸ்ட்!

Meenakshi Ponnunga : பஞ்சாயத்தில் மீனாட்சிக்கு ஷாக் கொடுத்த நீதிமணி.. வெற்றி வைத்த ட்விஸ்ட்!

Divya Sekar HT Tamil
Jul 08, 2023 01:25 PM IST

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்
மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாட்சி உடன் வர மறுத்த நீதிமணி திடீரென்று மனம் மாறி மீனாட்சியுடன் வருவதாக காரில் உட்கார்ந்து கொள்கிறான். மீனாட்சி நடந்தது என்ன என்று ஆச்சரியமாக வெற்றியிடம் கேட்க, ஃப்ளாஷ் கட்டில் வெற்றி நீதிமணிக்கு ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்து சரி செய்தது காட்டப்படுகிறது.

அதனை அடுத்து பஞ்சாயத்து கூடியிருக்க நீதிமணியும் மீனாட்சியும் வர மாட்டார்கள் என்று நினைக்க, பஞ்சாயத்திற்கு மீனாட்சி நீதிமணியும் வருகிறார்கள். யாரும் எதிர்பாராத விதமாக நீதிமணி வெற்றி தான் தன்னை அடித்தான் என்று மாற்றி சொல்லி விடுகிறான், இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதன்பிறகு பஞ்சாயத்து முடிந்ததும் நீதிமணி புஷ்பா உடன் சென்று விடுகிறான்.

நீதிமணி இப்படி செய்து விட்டானே என்று மீனாட்சி புலம்ப, இந்த நேரத்தில் நீதிமணியிடம் இருந்து போன் வருகிறது, வெற்றி பேசுகிறான். நீதிமணி புஷ்பா வீட்டில் இருந்தால் தான் அவள் செய்யும் சதி வேலைகளை கண்டுபிடிக்க முடியும் என்று திட்டமிட்டு தான் இப்படி செய்தோம் என்று வெற்றி கூறுகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.