Medical Camp : தமிழ்நாட்டில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம்!
தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிவரை 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் பருவமழை காலம் என்பதால் இதன் காரணமாக தொற்று நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான 10 வாரங்களில் 1000 இடங்களில் மொத்தம் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டம் தொடர்பான புகார்கள் அந்தந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தெரிவிக்கலாம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மழைக்கால நோய்களுக்காக இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 10 ஞாயிற்றுகிழமைகளிலும் 1,000இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.
மழைநீர் வடிகால்வாய்களை கட்டி முடிக்கப்பட்டு சிறப்பான நிலையில் உள்ளது. இந்த மருத்துவ முகாம்களில் பருவ கால காய்ச்சல் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகள் அறிவுறுத்தப்பட உள்ளதாகவும், அவசியம் இருப்பின் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1800425393 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு முகாம் குறித்த தகவல்களை அறியலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்