Mandus cyclone: கரையை கடக்கத் துவங்கியது 'மாண்டஸ்' புயல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mandus Cyclone: கரையை கடக்கத் துவங்கியது 'மாண்டஸ்' புயல்

Mandus cyclone: கரையை கடக்கத் துவங்கியது 'மாண்டஸ்' புயல்

I Jayachandran HT Tamil
Dec 09, 2022 11:20 PM IST

தமிழகம், ஆந்திராவை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

தமிழகம், புதுவை, ஆந்திராவை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் கரையை இரவு 10.30 மணியளவில் கடக்கத் தொடங்கியுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. தற்போது மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், சென்னை அருகே 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

சென்னை, காட்டுபாக்கம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.