Saibaba: சாய்பாபா பக்தர்கள்தான் டார்க்கெட்! செய்வினை எடுப்பதாக கூறி மோசடி செய்த மந்திரவாதி தோழி உடன் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Saibaba: சாய்பாபா பக்தர்கள்தான் டார்க்கெட்! செய்வினை எடுப்பதாக கூறி மோசடி செய்த மந்திரவாதி தோழி உடன் கைது!

Saibaba: சாய்பாபா பக்தர்கள்தான் டார்க்கெட்! செய்வினை எடுப்பதாக கூறி மோசடி செய்த மந்திரவாதி தோழி உடன் கைது!

Kathiravan V HT Tamil
Jun 27, 2023 09:38 AM IST

மோசடியில் ஈடுபட்ட மந்திரவாதி சபரிநாதன், அவரது தோழி ராதா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 சவரன் நகைகளும் 60 ஆயிரம் ரொக்க பணமும் மீட்கப்பட்டது.

சாய்பாபா பக்தரிடம் செய்வினை எடுப்பதாக கூறி பணம் மோசடி செய்த சபரிநாதன்
சாய்பாபா பக்தரிடம் செய்வினை எடுப்பதாக கூறி பணம் மோசடி செய்த சபரிநாதன்

சென்னை கே.கே.நகரை சேர்ந்த மோகன் நாத் (54 வயது) என்பவர் தீவிர சாய்பாபா பக்தராக அறியப்பட்டவர். தனது வீட்டில் மாதம் தோறும் இவர் நடத்தும் சாய்பாபா பூஜையில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த சபரிநாதன் (வயது 40), ராதா என்ற சுப்புலட்சுமி (வயது 43) ஆகியோரை கே.கே.நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் சந்தித்தார். தங்களை தீவிர சாய்பாபா பக்தர்கள் என கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் மோகன்நாத் வீட்டில் நடந்த சாய்பாபா பூஜையிலும் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென்று சாமி அருள் வாக்கு சொல்வது போல் சபரிநாதன் நடித்து மோகன்நாத்தின் உறவினர்கள், அவருக்கு செய்வினை வைத்திருப்பதாகவும், அதனால் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடம் என்றும் சபரிநாதன் கூறி உள்ளார்.

அதை உண்மை என்று நம்பிய மோகன்நாத் செய்வினை கோளாறை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்று சபரிநாதனை கேட்க, ’மாந்திரீக பூஜை செய்தால் பிரச்னை சரியாகிவிடும்’ என்று சபரிநாதன் கூறி உள்ளார்.

அதற்கு மோகன் நாத் ஒப்புக்கொண்ட நிலையில், பூகையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் என்று சபரிநாதன் சொன்னார். அதை ஏற்று 15 சவரன் நகைகளை மோகன் நாத் கொடுத்தார். பூஜைக்கான செலவு என்று சிறிது சிறிதாக 3 லட்சம் வரை சபரிநாதனிடம் மோகன் நாத் கொடுத்துள்ளார்.

தான் கே.கே.நகரில்தான் வசிப்பதாகவும், ராதா தனது சீடர் என்றும் சபரிநாதன் தெர்வீத்தார். பலமுறை பூஜை நட்நதது. பின்னர் மோகன் நாத் கொடுத்த 15 ப்சவரன் நகையும் தனது வீட்டில் நடக்கும் பூஜையில் வைத்துவிட்டு திருப்பி தருவதாக சபரிநாதன் கூறி உள்ளார். அதற்கு மோகன் நாத் ஒப்புக்கொண்டார்.

ஆனால் சபரிநாதனும் அவரது தோழி ராதவும் திடீரென்று காணாமல் போன நிலையில் கே.கே.நகரில் அவர்கள் வசித்து வந்த வாடகை வீடு பூட்டிக்கிடந்தது. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 15 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கத்தை சுருட்டிக்கொண்டு சபரிநாதனும், ராதாவும் தப்பி ஓடியது மோகன் நாத்திற்கு தெரிய வந்தது.

மேலும் சபரிநாதன் ஒரு போலி மந்திரவாதி என்றும், அவர் மீது புதுச்சேரியில் இது போல நிறைய பேரை கோடிக்கணக்கில் ஏமாற்றி மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இந்த தகவல்களை கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன் நாத், தான் மோசம் போனது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் மோசடியில் ஈடுபட்ட மந்திரவாதி சபரிநாதன், அவரது தோழி ராதா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 சவரன் நகைகளும் 60 ஆயிரம் ரொக்க பணமும் மீட்கப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.