போலீஸின் மூன்றாம் கண் சிசிடிவி - 50 புதிய கேமராக்களை தொடக்கி வைத்த மாநகர ஆணையர்
மதுரை மாநகரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் புதிதாக 50 சிசிடிவி கேமராக்களை மாநகரக் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
மதுரை: மதுரை மாநகரின் முக்கிய சாலை சந்திப்பாக திகழும் கோரிப்பாளையம் போக்குவரத்து சந்திப்பு, பள்ளிவாசல் சாலை, அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருபுறமும் போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பதற்காகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மற்றும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் காவல்த்துறையின் "மூன்றாம் கண்" என்ற வகையில் தனியார் நிறுவன உதவியுடன் நவீன வசதிகளுடன் கூடிய 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதன் இயக்கத்தை மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் மதுரை மாநகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் பொருத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்த சிலரை நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
டாபிக்ஸ்