Madurai AIIMS President : மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai Aiims President : மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்!

Madurai AIIMS President : மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்!

Divya Sekar HT Tamil
Jan 13, 2023 07:53 AM IST

Madurai AIIMS President Passes Away : பிரபல மூளை நரம்பியல் மருத்துவரும், மதுரை எய்ம்ஸ் தலைவருமான டாக்டர் நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன்
மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன்

கர்நாடகாவின் பெங்களூர் தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் இவர் பதவி வகித்து வந்தார். அத்துடன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நெறிமுறை குழு தலைவராகவும் , நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாவின் இயக்குனர் தேர்வு கமிட்டி தலைவராகவும் நாகராஜ் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் மருத்துவர் நாகராஜ் நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவரான டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நாகராஜன் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் மாமனார் ஆவார்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.