தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Liquor Prices Hikes At Tasmac Shops In Tamilnadu

Tasmac: மதுபானங்களின் விலை உயர்வு.. டாஸ்மாக் அறிவிப்பால் மதுப்பிரியர்கள் ஷாக்!

Karthikeyan S HT Tamil
Jan 29, 2024 09:37 PM IST

சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்களின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக்கடை
டாஸ்மாக் மதுபானக்கடை

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானக் கடைகள் அரசின் அனுமதி பெற்று மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. டாஸ்மாக் மதுவிற்பனை தான் தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ. 147 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது வரும் பிப்.1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது வரும் பிப்.1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்