மகாராஷ்டிர தமிழப் பாட புத்தகத்தில் நாசா சென்ற புதுக்கோட்டை மாணவி குறித்த பாடம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மகாராஷ்டிர தமிழப் பாட புத்தகத்தில் நாசா சென்ற புதுக்கோட்டை மாணவி குறித்த பாடம்!

மகாராஷ்டிர தமிழப் பாட புத்தகத்தில் நாசா சென்ற புதுக்கோட்டை மாணவி குறித்த பாடம்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 05, 2022 09:35 AM IST

தமிழ்நாட்டு மாணவியின் செயலை பாராட்டி மகாராஷ்டிர மாநில தமிழ்பாடப் புத்தக்கதில் அவரைப் பற்றி பாடம் ஒன்று இடம்பிடித்துள்ளது.

<p>நாசா சென்ற புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமி, தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்</p>
<p>நாசா சென்ற புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமி, தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்</p>

புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஜெயலட்சுமி பதினொறாம் வகுப்பு படித்தபோது அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய போட்டி ஒன்றில் வெற்றி பெற்றார். இதையடுத்து ஜெயலட்சுமி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடும் வாய்ப்பை பெற்றார்.

இருப்பினும் அமெரிக்கா போய் வருவதற்கான பயண செலவை மாணவியே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பலரது உதவியால் அவர் அமெரிக்க செல்வதற்கான உதவி கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பிரபல தொண்டு நிறுவனம் ஒன்று மாணவி ஜெயலட்சுமிக்கு தேவையான பணத்தை கொடுக்க முன்வந்தபோது, தனக்கு அமெரிக்க சென்று வர போதிய பணம் கிடைத்துவிட்டதாகவும், தங்களது ஊரில் பலரும் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் வீட்டுக்கொரு தனிநபர் கழிப்பறை கட்டிக்கொடுக்குமாறு தொண்டு நிறுவனத்திடம் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

இதை ஏற்று அந்த நிறுவனம் சார்பில் ஜெயலட்சுமி வசித்து வரும் ஆதனக்கோட்டை பகுதியில் இருக்கும் 126 வீடுகளுக்கு தனிக் கழிப்பறை கட்டிக்கொடுத்தது.

அப்போது ஜெயலட்சுமியின் இந்த செயலுக்கு ஊர் மக்களிடம் பாராட்டுகள் குவிந்தன.  இந்த சம்பவம் பற்றி கனவு மெய்ப்படும் என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 7ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் பாடம் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் மாணவில் ஒருவர் செய்த செயல் வெளி மாநிலமான மகராஷ்டிராவில் உள்ள பாடப்புத்தகத்தில் இடம்பிடித்திருப்பதற்கு மீண்டும் ஜெயலட்சுமியை அந்தப் பகுதியை சேர்ந்தவர்களும் மற்றும் விவரமரிந்தவர்களும் பாராட்டி வருகிறார்கள்.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.