Nilgiris: ’2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது! முதல்வர் 10 லட்சம் நிவாரணம்!’-leopard caught after killing 2 people in nilgiris - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nilgiris: ’2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது! முதல்வர் 10 லட்சம் நிவாரணம்!’

Nilgiris: ’2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது! முதல்வர் 10 லட்சம் நிவாரணம்!’

Kathiravan V HT Tamil
Jan 07, 2024 03:58 PM IST

”உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு”

வனத்துறையினரிடம் பிடிப்பட்ட சிறுத்தை
வனத்துறையினரிடம் பிடிப்பட்ட சிறுத்தை

 முன்னதாக உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில்,  நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த திருமதி. சரிதா (வயது 29) க/பெ. பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி    (வயது 3½) த/பெ. சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், பந்தலூர் பகுதியில் உள்ள அம்ரூஷ் வளைவு பகுதியில் உள்ள புதர் ஒன்றில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை ட்ரோன் கேமிராக்கள் உதவி உடன் வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.  அச்சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் நடந்தது. 

மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் மயக்கம் அடைந்த சிறுத்த புதர் பகுதிக்கு சென்று பதுங்கிய நிலையில் அந்த சிறுத்தையை வலையில் பிடித்து கூண்டில் அடைத்து பாதுகாப்பான இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். 

பிடிப்பட்டுள்ள சிறுத்தையின் உடல்நிலையை கண்காணித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.