Dindigul : நிலத்தகராறு.. போலீஸ் சிறப்பு ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல்.. திண்டுக்கல்லில் பரபரப்பு!
அய்யலூர் அருகே நிலத்தை அபகரிக்கும் நோக்கில் போலீசார் முன்னிலையில் போலீஸ் சிறப்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமாரவேல். இவர் திண்டுக்கல் காவல் ஆயுதப்படையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாக்கியம் இவரும் சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளன. குமாரவேலுக்கு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் பூர்வீக சொத்து ஒரு ஏக்கர் 4 சென்ட் நிலம் உள்ளது. இவரது நிலத்துக்கு அடுத்து வேங்காயி என்பவரின் 40 சென்ட் நிலம் உள்ளது.
இதில் நீதிமன்ற தீர்ப்பின்படி அவரவர்க்கு சேர வேண்டிய நில அளவைகள் தீர்ப்பு வெளியிட்டு பல வருடங்களாகியும் நிலத்தை சர்வேயர் மூலம் அளந்து கல் ஊண்டினாலும், அதனை பிடுங்கி எறிந்து விடுவது என வழக்கமாக கொண்டுள்ளனர். குமாரவேலுவின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் வேங்காயுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் செம்பன், ரவி ஆகியோர் இடத்தை அளக்கவிடாமல் ஒவ்வொரு முறையும் பிரச்சனை செய்து வருகின்றனர். ஏற்கனவே நில அபகரிப்பு புகாரில் விசாரணை முடிந்து குமாரவேலுக்கு சாதகமாக முடிவு வந்தது.
இது சம்பந்தமாக ஏற்கனவே நான்கு முறை சர்வேயர் வைத்து நிலத்தை அளந்து பிரச்சனையாகியுள்ளது. இது குறித்து எஸ்.பி.யிடம் புகார் அளித்து இன்று வடமதுரை போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை சர்வேயர் அளந்த பொழுது, சார்பு ஆய்வாளர் குமாரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வேங்காயி, செம்பன், ரவி மற்றும் 10க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த குமாரவேல் மற்றும் பூச்சம்மாள் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பாதுகாப்பில் இருக்கும் பொழுது சிறப்பு சார்பு ஆய்வாளர் குமாரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்