Former Minister Jayakumar: நிலஅபகரிப்பு புகாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு - ஜெயக்குமாருக்கு எதிரான மனு தள்ளுபடி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Former Minister Jayakumar: நிலஅபகரிப்பு புகாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு - ஜெயக்குமாருக்கு எதிரான மனு தள்ளுபடி

Former Minister Jayakumar: நிலஅபகரிப்பு புகாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு - ஜெயக்குமாருக்கு எதிரான மனு தள்ளுபடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 07, 2023 03:59 PM IST

நிலஅபகரிப்பு புகாரில் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்ந்த மான நஷ்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குக்கு எதிராக தொடரப்பட்ட நிராகரிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்பட ஆறு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், தன் மீது அவதூறு கருத்துகளை வெளியிட்ட மகேஷ் ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும், தொடர்ந்து தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள கூடாது என மகேஷ் தரப்பில் இருந்து நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையின்போது, ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மகேஷுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியன், "கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்தததாக கூறப்பட்டும் இந்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதியப்பட்டுள்ளது. இது அ்ரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.

மான நஷ்ட ஈடு கோரி தாங்கள் தொடர்ந்த வழக்கை எதிர்த்து மகேஷ் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

புகார்தாரர் ஆன மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் மீது புகார் அளிக்க இயலவில்லை. எனவே கடந்த ஆண்டில் அவர் மீது புகார் அளித்ததாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், மகேஷ் பாபு நிராகரிப்பு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.