Komban Encounter: ‘வளரும் ரவுடிகளுக்கு இவர்தான் கேங் லீடர்!’ கொம்பன் என்கவுண்டர் குறித்து வருண்குமார் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Komban Encounter: ‘வளரும் ரவுடிகளுக்கு இவர்தான் கேங் லீடர்!’ கொம்பன் என்கவுண்டர் குறித்து வருண்குமார் பேட்டி!

Komban Encounter: ‘வளரும் ரவுடிகளுக்கு இவர்தான் கேங் லீடர்!’ கொம்பன் என்கவுண்டர் குறித்து வருண்குமார் பேட்டி!

Kathiravan V HT Tamil
Nov 23, 2023 10:27 AM IST

“இவர் மீது மொத்தம் 58 வழக்குக்கள் உள்ளது. பல குற்றவாளிகளோடு இவருக்கு தொடர்பு உள்ளது. சிறையில் உள்ளபோது அங்கிருந்தவர்களுடன் பல திட்டங்களை தீட்டி உள்ளார்”

காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொம்பன் ஜெகன் தொடர்பாக திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் பேட்டி
காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொம்பன் ஜெகன் தொடர்பாக திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் பேட்டி

ரவுடி கொம்பன் திரு. வினோத் அவர்களை வெட்டியுள்ளதுடன் ஆய்வாளரை தாக்கவும் முற்பட்டுள்ளார். பெட்ரோல் பாம் மற்றும் நாட்டு வெடிகுண்டு மூலம் இந்த தாக்குதலை நடத்தியதுடன் எஸ்.ஐ கையிலும் வெட்டி உள்ளார்

இதன்காரணமாக தற்காப்புக்காக ஆய்வாளர் இரண்டு ரவுண்ட் துப்பாகியால் சுட்டுள்ளார். காயம் அடைந்த அவரை லால்குடி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பிரேத பரிசோதனைக்காக் உடலை திருச்சி மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளோம். இது என்கவுண்டர் இல்லை; ஃபயரிங் இன்சிடட் என்று சொல்கிறோம்.

சிறுகனூர் ஆய்வாளர் சம்பவம் நடந்த இடத்தில் பார்க்கும்போது, ஒரு நாட்டுத்துப்பாக்கி, சில பெட்ரோல் பாம், பட்டாசு பொருட்களில் செய்யும் சணல் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை மறைவான பகுதியில் தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவர் செய்யும் குற்ற சம்பவங்கள் குறித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக்களில் ஷேர் செய்துள்ளார். இப்போ வளர்ந்து வரும் ரவுடிகளுக்கு இவர் ஒரு கேங் லீடர் போல் செயல்பட்டு வந்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கைக்கு பிறகு நீதிபதிகள் விசாரணைக்கு இதனை அனுப்புவோம். இவர் மீது மொத்தம் 58 வழக்குக்கள் உள்ளது. பல குற்றவாளிகளோடு இவருக்கு தொடர்பு உள்ளது. சிறையில் உள்ளபோது அங்கிருந்தவர்களுடன் பல திட்டங்களை தீட்டி உள்ளார்.

சென்ற காவல்துறையினருக்கே அவர் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவில்லை. விசாரணை அதிகாரியாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் செயல்படுவார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.