Kayalvizhi Seeman: நாம் தமிழர் கட்சியில் தலை தூக்கும் வாரிசு அரசியல் - கயல்விழியால் கட்சிக்குள் களேபரம்?!-kayalvizhi seemans rise to prominence in the naam tamilar party succession political criticism - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kayalvizhi Seeman: நாம் தமிழர் கட்சியில் தலை தூக்கும் வாரிசு அரசியல் - கயல்விழியால் கட்சிக்குள் களேபரம்?!

Kayalvizhi Seeman: நாம் தமிழர் கட்சியில் தலை தூக்கும் வாரிசு அரசியல் - கயல்விழியால் கட்சிக்குள் களேபரம்?!

Marimuthu M HT Tamil
Jan 28, 2024 03:19 PM IST

நாம் தமிழர் கட்சியிலும் வாரிசு அரசியல் தலைதூக்குவதாகப் பலரும் பேசி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியில் தலை தூக்கும் வாரிசு அரசியல் - கயல்விழியால் கட்சிக்குள் களேபரம்
நாம் தமிழர் கட்சியில் தலை தூக்கும் வாரிசு அரசியல் - கயல்விழியால் கட்சிக்குள் களேபரம்

திமுகவின் வாரிசு அரசியலை எதிர்க்கட்சிகளான அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன. அதில் மிக முக்கியமாக நாம் தமிழர் கட்சி 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடுமையாக எதிர்த்தது. அதனால் வளர்ச்சியும் கண்டது. திமுகவை பிடிக்காதவர்கள் எல்லாம், அதிமுகவில் இணையும்போக்கு மாறி மெல்ல நாம் தமிழர் கட்சியிலும் சேரத்தொடங்கினர். இதனால் தமிழ்நாட்டின் பேரூராட்சிகள் பலவற்றிலும் நாம் தமிழர் கட்சிக்கு கிளை அலுவலகங்கள் உள்ளன.

திமுகவில் இளைஞரணிச் செயலாளராக இருந்து, அக்கட்சியின் தலைவராக இருந்தவர், மு.க.ஸ்டாலின். அதே வழியில் தான், அவரது மகனான உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அதேபோல் தான், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வாயிலாக, கயல்விழி அக்கட்சியில் பொதுச்செயலாளராக முயற்சிக்கிறார் என புலம்புகின்றனர், நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்.

அதற்கு மிகப்பெரிய சான்றாக சென்னை - திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி, கட்சிக்கொடியையும் ஏற்றியுள்ளார், கயல்விழி சீமான். இது சீமானின் ஆதரவாளர்களை எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதுகுறித்து திமுகவினர் ட்ரோல் செய்தால், அது தற்செயலாக நடந்தது என முடித்துக்கொள்கின்றனர், நாதக உறுப்பினர்கள்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த வழக்கறிஞர் தடா. சந்திரசேகரன் காலமானதில் இருந்து அப்பதவி இன்னும் அக்கட்சியில் நிரப்பப்படவில்லை. தடா சந்திரசேகரின் இரங்கல் கூட்டத்தில் கூட நாம் தமிழர் கட்சியினை வலுப்படுத்துவது பற்றியே கயல்விழி சீமான் பேசியிருக்கிறார். அண்மையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் இளவஞ்சி, ஒரு பெண் ஒருவரை, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அந்தப் பெண் பொதுச்செயலாளர் கயல்விழி தான் மறைமுகமாக கண்ணீர் வடிக்கின்றனர், நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

எது எப்படியோ, தேர்தல் அரசியலில் வாரிசு அரசியல் என்னும் வார்த்தையை முதலில் தேமுதிக கைவிட்டது. இப்போது, நாம் தமிழர் கட்சியும் கைவிடும் எனக்கூறுகின்றனர், அரசியல் நோக்கர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.