தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  L Murugan Speech:காசிமேட்டில் சர்வதேச தர துறைமுகம் - அமைச்சர் எல் முருகன் பேச்சு

L Murugan speech:காசிமேட்டில் சர்வதேச தர துறைமுகம் - அமைச்சர் எல் முருகன் பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 22, 2022 01:35 PM IST

சர்வதேச தரத்துக்கு சென்னை காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த இருப்பதாகவும், ராமேஸ்வரத்தில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட உள்ளது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.

மீன்வளத் துறையில் மேற்கொள்ள வேண்டிய மீனவ வாழ்வாதாரம் சார்ந்த மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்
மீன்வளத் துறையில் மேற்கொள்ள வேண்டிய மீனவ வாழ்வாதாரம் சார்ந்த மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

தூய்மை பாரதம் திட்டம் 2.0 மூலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மத்திய மீன்வள நிறுவனத்தின் கடல் மற்றும் பொறியியல் பயிற்சி பிரிவில் தேவையற்ற பொருள்கள் மூலம் அரசுக்கு ரூ.90 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. இதனுடன் கூடுதலா ரூ.6 லட்சம் வரை வருவாய் விரைவில் கிடைக்க உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து மீன்வள துறைக்கு இதுவரை ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தமிழகத்துக்கு மட்டும் சுமார் ரூ.1,800 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை காசிமேடு துறைமுகம் ரூ.97 கோடியில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளது. ராமேஸ்வரத்தில் கடல்பாசி பூங்கா அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

மீன் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இறால் ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா காலத்திலும் மீன் ஏற்றுமதி 32 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்