தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi Student Death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? - ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்

Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? - ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்

Karthikeyan S HT Tamil
May 22, 2024 04:04 PM IST

Kallakurichi student death: தனது மகளின் மரணம் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? - ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்.
Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? - ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்.

ட்ரெண்டிங் செய்திகள்

புகார் அளித்த பிறகு மாணவியின் தாயார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "கனியாமூர் பள்ளியின் முதல்வருக்கு என்று மூன்று அறைகள் உள்ளன. அந்த அறைகளில் வெளிநாட்டு ஆணுறைகள் இருந்தது. அங்கு ஆணுறைகள் கிடந்தது குறித்து காவல்துறை எந்த விசாரணையும் செய்யவில்லை. ஒரு பள்ளிக்கு வெளிநாட்டு ஆணுறைகள் எப்படி வந்தது என்பதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. என்னுடைய மகள் பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தான் எங்களது குற்றச்சாட்டு. இதுவரை போக்சோ வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பள்ளி நிர்வாகம் மீது உள்ள தவறுகளை மறைப்பதற்காக எங்களை பற்றி தவறாக பேசுவதற்காக சவுக்கு சங்கரை பள்ளி நிர்வாகம் விலைக்கு வாங்கியது. என் மகள் மீது சவுக்கு சங்கர் அபாண்டமான பழி சுமத்தியுள்ளார். சவுக்கு சங்கர் பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு அவதூறு பரப்புகிறார்." என்று தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவி மர்ம மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ்-2 மாணவி 2022 ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் 3ஆவது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 17-ல் பள்ளியில் பெரிய அளவில் கலவரம் வெடித்து, உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

பள்ளி நிர்வாகிகள் கைது

மாணவி மரணம் தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிபிசிஐடி போலீஸார் 1,152 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதில், பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கதறி அழுத தாய்

இந்த வழக்கு சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆஜராயினர். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த மாணவியின் தாய் செல்வி, பள்ளி நிர்வாகிகளைக் கண்டதும் கூச்சலிட்டவாறு அழுதார். அருகில் இருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்தினர். மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.பா.மோகன் கடந்த விசாரணையின்போது கோரிய, அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல்அறிக்கை உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும் என்றார்.

வழக்கு ஒத்திவைப்பு

அரசு வழக்கறிஞர் தேவசந்திரன் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமைக் குற்றவியல் நடுவர் ராம் உத்தரவிட்டார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தனது மகளின் மரணம் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது உயிரிழந்த மாணவின் தாயார் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மே 22) புகார் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்