Savukku Shankar Release: திமுகவுக்கு எதிராக வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!-journalist and youtuber savukku shankar to continue criticism of dmk government after jail release - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar Release: திமுகவுக்கு எதிராக வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!

Savukku Shankar Release: திமுகவுக்கு எதிராக வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!

Kathiravan V HT Tamil
Sep 25, 2024 09:06 PM IST

Savukku Shankar Press Meet: தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடிதான் திரு.ஸ்டாலின் அவர்கள். பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை தருவது போலத்தான் திமுகவின் தலைவராகி இருக்கிறார். அதுபோலத்தான் தமிழகத்தின் முதல்வராகவும் ஆகி இருக்கிறார்.

Savukku Shankar Release: தொடர்ந்து வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!
Savukku Shankar Release: தொடர்ந்து வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!

எனது கரம் உடைக்கப்பட்டது

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளரும், யூடியூபரும் ஆன சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். மதுரை சிறையில் இருந்து விடுதலை ஆன அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நீதிமன்றங்களுக்கு நன்றி. எனது வழக்கறிஞர்களுக்கு நன்றி. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு முறை குண்டர் சட்டத்தில் என்னை பவளவிழா கொண்டாடும் ஒரு கட்சி அடைத்திருக்கிறது என்பது உள்ளபடியே வெட்கக்கேடு. நான் நடத்தி வந்த சவுக்கு மீடியா எட்டு மாத காலத்துக்குள் திராவிட மாடல் அரசின் உண்மை முகத்தை தோல் உரித்து காட்டியதன் காரணமாகவே என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. அவதூராக காவல்துறையினரை பற்றி பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் முழுக்க நான் போலீஸ் வாகனத்தில் அலைக்கழிக்கப்பட்டேன். கோவை சிறையிலேயே எனது வலது கரம் உடைக்கப்பட்டது. 

உண்மைகளை சொல்ல அஞ்சப்போவது இல்லை 

காவல்துறை என்னை கஸ்டடி எடுக்கும் போது வெளியே வந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழக அரசை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது. திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதை நிபந்தனையாக கூறினார்கள். இந்த நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நாங்கள் உடனே உடனடியாக உங்களை விடுவிப்போம், அதை மீறினால் நாங்கள் ஒரு வருடத்திற்கு உங்களை சிறையிலிருந்து வெளியே வரவிடமாட்டோம் என நெருக்கடி கொடுத்தார்கள். நான் உண்மைகளை பேசுவதற்கு என்றுமே அஞ்சப்போவதில்லை என கூறினேன். 

தந்தையின் நிழலில் வளர்ந்தவர் ஸ்டாலின் 

இதனால் என்னை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தார்கள். தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விமர்சனங்களை விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடிதான் திரு.ஸ்டாலின் அவர்கள். பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை தருவது போலத்தான் திமுகவின் தலைவராகி இருக்கிறார். அதுபோலத்தான் தமிழகத்தின் முதல்வராகவும் ஆகி இருக்கிறார்.

சவுக்கு மீடியா முடக்கப்பட்டு உள்ளது

உண்மைகளை சவுக்கு மீடியா ஏறக்குறைய எட்டு மாத காலமாக தொடர்ந்து எடுத்துக் கூறியதன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சவுக்கு மீடியா ஆபீஸ், வீடு சீல் வைக்கப்பட்டு உள்ளது. எனது தாயாரின் பென்ஷன் கணக்கு உட்பட ஏழு கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. 

நாட்டில் இன்று நடக்கும் உண்மைகள் எந்த வகையிலும் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஆகியோர் மிக கவனமாக இருக்கின்றனர். 

வீரியமாக செயல்படுவேன்

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 66 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தது உங்களுக்கு அத்தனை பேருக்கும் நினைவிருக்கும். சவுக்கு மீடியாவில் பணியாற்றுபவர்களை காவல்துறையினர் மிரட்டி உள்ளனர். இது ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள கொடுமையாக நீங்கள் இதை பார்க்க வேண்டும். 

சவுக்கு மீடியா நிச்சயமாக தொடரும். அதே வீரியத்துடன் தொடர்ந்து செயல்படுவேன். தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் பத்திரிகை சுதந்திரத்தை குரல்வலையை நெறிப்பதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் இன்று சுதந்திரமாக பத்திரிகைகள் செயல்பட முடியாத ஒரு அவலச்சூழல் நிலவுகிறது. இதை மாற்றுவதற்கான நாள் வெகுவிரைவில் வரும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.