Union Govt. Jobs: சென்னை பெல் நிறுவனத்தில் ரூ. 55 ஆயிரம் சம்பளத்தில் வேலை
மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் அதிகபட்சம் ரூ. 55 ஆயிரம் சம்பளத்துடன் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ், பெல் என்று அழைக்கப்படும் பாரத் எலெக்ட்ரானிஸ் லிமிடெட் நிறுவனம் உள்ளது. பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கி வருகிறது.
இங்கு இந்திய ராணுவம் உள்பட பிற அமைச்சகத்துக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிக்கப்படுகிறது.
இதையடுத்து புனேவில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனம் சார்பில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்
அதன்படி புரொஜெக்ட் என்ஜினியர்கள் 1 (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேபோல் டிரெய்னி ஆபிசர் I (பைனான்ஸ்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
கல்வித்தகுதி
புரொஜெக்ட் என்ஜினியர் பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் பிஇ அல்லது பிடெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங், கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், டெலி கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.
அத்துடன், அதோடு டெல்காம், நெட்வொர்க்கிங், சிசிடிவி, பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்ஸ், செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்டவை சார்ந்த துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்பது அவசியம்.
டிரெய்னி ஆபிசர் பணிக்கு எம்பிஏ பைனான்ஸ்/சிஏ/சிஎம்ஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: புரொஜெக்ட் என்ஜினீயர் I (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு விண்ணப்பிப்போர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
டிரெய்னி ஆபிசர் I (பைனான்ஸ்) பணிக்கு விண்ணப்பிப்போர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.
சாதிவாரியான இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இந்த பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இருப்பினும் அவர்கள் UR (Unreserved Category) பிரிவில் விண்ணப்பம் செய்யலாம். .
மாத சம்பளம்
இந்த பணி தற்காலிகமானது எனவும், பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்னி ஆபிசர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், இரண்டாவது ஆண்டு ரூ.35 ஆயிரம், மூன்றாவது ஆண்டு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
புரொஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.40 ஆயிரம், இரண்டாவது ஆண்டு ரூ.45 ஆயிரம், மூன்றாவது ஆண்டு ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. நான்காவது ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டால் ரூ.55 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்