Job alert & Subsidy : மத்திய அரசில் உள்ள காலியிங்கள் என்ன? ரூ.1.50 கோடி வரை மானியம் யாருக்கு? ஒரு செய்தி இரு தகவல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert &Amp; Subsidy : மத்திய அரசில் உள்ள காலியிங்கள் என்ன? ரூ.1.50 கோடி வரை மானியம் யாருக்கு? ஒரு செய்தி இரு தகவல்

Job alert & Subsidy : மத்திய அரசில் உள்ள காலியிங்கள் என்ன? ரூ.1.50 கோடி வரை மானியம் யாருக்கு? ஒரு செய்தி இரு தகவல்

Priyadarshini R HT Tamil
May 27, 2023 11:55 AM IST

Job Opportunity and Subsidy : மத்திய அமைச்சக அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்பட மத்திய அரசுக்கு பாத்தியப்பட்ட பல்வேறு அலுவலகங்களில் 1,600 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சில பணிகளுக்கு கூடுதல் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 1ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டியல் பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு கணினி வழியில் முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இத்தகவல் மத்திய அரசின் பணியாளர் நலன் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் தொழில் சாதனையாளர் திட்டம் – 1.50 கோடி வரை மானியம் பெற வாய்ப்பு

தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் சாதனையாளர் திட்டத் தில், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ரூ.1.50 கோடி வரை மானியம் பெற வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –

அண்ணல் அம்பேத்கர் தொழில் சாதனையாளர் திட்டம் 2023 – 24 நிதியாண்டு முதல் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கிக் கடனாகவும் 35 சதவீதம் முன் விடுவிப்பு மானியமாகவும் (அதிகபட்சம் ரூ.1.50 கோடி) வழங்கப்படும். மேலும் வங்கிக் கடனுக்கான வட்டியில் 6 சதவீதம் பின் விடுவிப்பு மானியமாக வழங்கப்படும்.

இப்புதிய திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சகல்வித்தகுதி எதுவுமில்லை. 18 – 55 வயதுக்கு உட்படோர் வணிகம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் செய்துவரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தங்களின் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

பழங்குடி மற்றும் பட்டியல் இனத்தவரின் புத்தொழில் நிறுவனங்கள், அரசு துறைகளின் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ள விரும்பும் முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகள் அதிக நபர்களுக்கு வேலையளிக்கக்கூடிய உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை தொடங்க உதவி கேட்போருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு திரு நெல்வேலி மாவட்டத் தொழில் மையத்தை நேரிலோ 0462 – 2572162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.