தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Jallikattu 2024: Jallikattu Competition Started At Palamedu, Madurai District

Jallikattu 2024: ‘பாலமேட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகள்! திமிறி எழும் காளைகள்! கொட்டும் பரிசு மழை!’

Kathiravan V HT Tamil
Jan 16, 2024 07:07 AM IST

”Palamedu Jallikattu 2024: நேற்றைய தினம் நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இன்றைய தினமும் இதே போன்ற எந்த உயிரிழப்புகளும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது”

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்த நிலையில் பாலமேட்டில் இன்றும், அலங்காநல்லூரில் நாளையும்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

பாலமேட்டில் உள்ள மஞ்சமலையாற்றில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதி மொழி விழா நடைபெற்ற நிலையில் அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி காட்டி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 

சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு காரும் வழங்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பசு கன்றுகள், பிரோ, கட்டில், மெத்தை, தங்கக்காசுகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது. 

இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது.

இந்த ஜல்லிக்கட்டுபோட்டிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

விளையாடும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது. அதே போல் கால்நடைகளுக்காகவும், வீரர்களுக்காகவும் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. 

நேற்றைய தினம் நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இன்றைய தினமும் இதே போன்ற எந்த உயிரிழப்புகளும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

 

WhatsApp channel

டாபிக்ஸ்